மக்கள் நல இயக்கத்தை தொடங்கிய விஷால் : அரசியலுக்கு அச்சாரமா?

Last Modified புதன், 29 ஆகஸ்ட் 2018 (14:36 IST)
நடிகர் விஷால் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி கொடியையும் அறிமுகம் செய்துள்ளார்.

 
திரைத்துறையில் ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு பின் அரசியலுக்கு வரும் நடிகர்களின் பட்டியலில் விஷால் மற்றும் விஜய் ஆகியோர் உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்று ஏற்கனவே அரசியலில் இறங்கிவிட்டார் விஷால். மேலும், தமிழக முக்கிய பிரச்சனைகளின் போது அது தொடர்பாக காட்டமான கருத்துகளை அவர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
 
இந்நிலையில், இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ரசிகர்களுக்கு பிறந்த நாள் சிறப்பு செய்தியாக சண்டை கோழி 2-வின் ரிலீஸ் தேதி அக்டோபர் 18 என அறிவிக்கப்பட்டதோடு. அதுமட்டுமில்லாமல், மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பையும் விஷால் தொடங்கி அதற்கான கொடியை இன்று அவர் அறிமுகம் செய்துள்ளார். விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி மற்றும் அணி சேர்வோம், அன்பை விதிப்போம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :