விஷால் பிறந்தநாளான இன்று சண்டக்கோழி 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Last Updated: புதன், 29 ஆகஸ்ட் 2018 (12:54 IST)
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் `சண்டக்கோழி-2' படம் உருவாகி வருகிறது. இப்படம் வரும் அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம்  அறிவித்துள்ளது.
விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியடைந்தது. இதனையடுத்து தற்போது  இப்படத்தின் இரண்டாம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட  நடிகர்கள் நடித்துள்ளனர்.
 
இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் படக்குழுவினருக்கு தங்க நாணயம் வழங்கினார். அதைத் தொடர்ந்து நாயகன் விஷால்  மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோர், தனித்தனியாக படக்குழுவினர் 150 பேருக்கு தலா ஒரு தங்க நாணயத்தை பரிசாக வழங்கியதுடன், அனைவருக்கும் விருந்தளித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
 
இந்நிலையில் இப்படத்தின் நாயகன் விஷால் இன்று பிறந்தநாளை கொண்டாடுவதையடுத்து, இதன் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம்  அக்டோபர் 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :