வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஜூன் 2018 (18:06 IST)

மனைவி பற்றி மும்தாஜிடம் குறை கூறும் பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட்டிற்கான 3வது புரோமோ வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சியில் தினமும் ஒளிப்பரப்பாகும் எபிசோட்டிற்கான புரோமோ வீடியோ விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும். அதன்படி இன்று இரண்டு புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் 3வது புரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், மும்தாஜ், பாலாஜியிடம் உங்களது மனைவி என் உங்கள் மீது இவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என கேட்கிறார். அதற்கு, பாலாஜி கொடுத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் அது அவர்களுக்கே பிரச்சனையாகிவிடும் என கூறினார்.