திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 20 ஜூன் 2018 (14:47 IST)

பசுமை வழிச்சாலை குறித்து ட்வீட் செய்த நடிகர் விவேக்

சென்னையில் இருந்து சேலத்திற்கு பசுமை வழிச்சாலை அமைக்க பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் இதனை பிரேசில் போல் அமைக்க வாய்ப்பிருக்கிறதா என்று நடிகர் விவேக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பசுமை வழிச்சாலை 8 வழிச்சாலையாக, சென்னை அருகேயுள்ள தாம்பரம் முதல் சேலம் நகரம் அரியானூர் வரையில், காஞ்சிபுரத்தில் 59.1 கிமீ,  திருவண்ணாமலையில் 123.9 கிமீ, கிருஷ்ணகிரியில் 2 கிமீ, தருமபுரியில் 56 கிமீ, மற்றும் சேலத்தில் 36.3 கிமீ, என இம்மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட  உள்ளன.
 
இதனால் இந்த வழித்தடத்தில் உள்ள 8 மலைகளை உடைத்தும் 3 இடங்களில் மலைகளை குடைந்து குகை வழியாகவும் சாலை அமைக்கப்பட உள்ளது.  இதனால் இயற்கை வளங்கள் அழியும் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகர் விவேக் ட்விட்டரில் கருத்து தெரிவித்ததோடு வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் தேசக்கட்டுமானம் முக்கியம் தான். ஆனால் காடுகள், வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட உயலுமா?  பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.