வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 20 ஜூன் 2018 (17:10 IST)

பணத்துக்காக மோசமான படங்களில் நடித்தேன்: ராதிகா ஆப்தே பகீர்!

நடிகை ராதிகா ஆப்தே ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்ததன் மூலம் அனைவருக்கு பரிச்சையமான முகமாக மாறினார். இவர் தற்போது பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 
 
அதோடு படங்களில் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்தும் வருகிறார். இதனால் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தும். தற்போது இவர் மேலும் ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். 
 
அவர் கூறியது பின்வருமாறு, சினிமா துறையில் பின்புலம் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகின்றன. மற்றவர்கள் பட வாய்ப்புக்கு கஷ்டப்பட வேண்டி உள்ளது. 
 
நான் எந்த பின்னணியும் இல்லாமல்தான் சினிமாவுக்கு வந்தேன். நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். சினிமா துறைக்கு வந்தபோது எந்த மாதிரி கதைகளில் நடிக்க கூடாது என்று நினைத்து இருந்தேனோ அந்த படங்களில்தான் நடிக்க வேண்டி இருந்தது. 
 
என் பிழைப்புக்கு தேவையான பணத்துக்காக மோசமான படங்களில் நடித்துள்ளேன். இப்போது எனக்கு பெயர் புகழ் கிடைத்து விட்டது. பட வாய்ப்புகளும் வருகின்றன. எனவே எனக்கு பிடித்த கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறேன் என கூறியுள்ளார்.