திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

சுவையான வெண்ணிலா கப் கேக் செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
மைதா மாவு - ஒன்றரை கப்
பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
வெண்ணெய் - ஒரு கட்டி
சர்க்கரை - ஒரு கப்
முட்டை - 3
வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பால் - 1 கப்
உப்பு - சிறிதளவு
செய்முறை:
 
முதலில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து அத்துடன், மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கட்டி இல்லாமல் அடித்துக் கொள்ளவும்.
 
அதன்பிறகு, வெண்ணிலா எசன்ஸ் கலந்ததும், சலித்த மாவு பாதியை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். பின்னர், பால் சேர்த்து கலந்து  மீண்டும் மீதமுள்ள மாவு சேர்த்து கேக் மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.
 
இந்த கலவையை மஃபின் கப்களில் ஊற்றி பின்னர், ஏற்கனவே சூடு செய்த ஓவனில் 180 டிகிரி செல்சியசில் 20 நிமிடங்களுக்கு வைத்து வேகவைத்து எடுக்கவும். சுவையான வெண்ணிலா கப் கேக் தயார்.