1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 30 ஜூன் 2022 (16:56 IST)

சுவையான ரவை வாழைப்பழ பணியாரம் செய்ய !!

Banana Paniyaram
தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்
மைதா - 1 கப்
சர்க்கரை - 1.5 கப்
வாழைப்பழம் - 2
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு



செய்முறை:

ரவையை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் ரவையுடன், வாழைப்பழம், மைதா, சர்க்கரை சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு திக்கான கலவையாக்கிக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல் கலக்க வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரவை மைதா கலவையை ஒரு குழியான ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு சிவந்து வந்ததும் எடுத்து தட்டில் வைத்து பரிமாறவும். சூப்பரான ஸ்நாக்ஸ் ரவை வாழைப்பழ பணியாரம் தயார்.

குறிப்பு: வாழைப்பழத்தை மிகவும் நைசாக பிசைந்து கொள்ள கூடாது. சற்று ஒன்றும் பாதியாக பிசைந்து கொள்ள வேண்டும். இதை குழிப்பணியார சட்டியிலும் செய்யலாம்.