செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 27 ஜூன் 2022 (18:12 IST)

எளிதான முறையில் மிளகாய் பஜ்ஜி செய்ய !!

Milagai Bajji
தேவையான பொருட்கள்:

நீளமான மிளகாய் - 10
கடலை மாவு  - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 3 டீஸ்பூன்
ஓமம் - 1 டீஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, ஓமம் மற்றும் சாட் மசாலா சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் மிளகாயை நன்கு நீரில் கழுவி, பின் நன்கு உலர வைத்து, நீளவாக்கில் இரண்டாக கீறி, அதனுள் உள்ள விதைகளை நீக்கி விட வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலை மாவில் மிளகாயை பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு 4-5 நிமிடம் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மிளகாயையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான மிளகாய் பஜிஜி தயார்.