தேங்காய் பால் பணியாரம் செய்ய !!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - அரை கப்
உளுந்து - அரை கப்
தேங்காய் - ஒன்று
பால் - ஒரு டம்ளர்
ஏலக்காய் - 1 சிட்டிகை
சர்க்கரை - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) அரைக்கவும். அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா, சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
தேங்காயை துருவி தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்..
பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து ஒரு கப்பில் போட்டு அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும். தித்திப்பான தேங்காய் பால் பணியாரம் தயார்.