புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By

அற்புத சுவையில் ரசகுல்லா செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
பால் - 1/2 லிட்டர்
எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 மற்றும் 3/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
பாதாம், பிஸ்தா - தேவையான அளவு
செய்முறை:
 
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவேண்டும். பால் நன்கு கொதித்தது அதில் எலுமிச்சைச்சாறு சேர்த்து பால் திரியும்வரை தொடர்ந்து கிளற  வேண்டும்.
 
பாலில் இருந்து தண்ணீர் பிரிந்ததும், அதனை மெல்லிய துணியில் போட்டு தண்ணீர் வடியும் வரை தனியாக கட்டி தொங்க விட வேண்டும். தண்ணீர்  வடிந்ததும், திரிந்த பாலை தனியாக எடுத்து அதனை மென்மையாக பிசைய வேண்டும். அடுத்தது பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும்.
 
பின்னர் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை தண்ணிரில் கரைந்து சிறிது கெட்டியான பின்னர் உருட்டி வைத்துள்ளதை உருண்டைகளை அதில் போடவும்.
 
முதலில் குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்னர் மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இறுதியாக சர்க்கரை நீரில் போட்ட திரிந்த பால் உருண்டைகள் வெந்ததும் அதனை குளிர வைத்து சிறிது அளவு பாதாம், பிஸ்தாவை அதன் மேல் தூவி பரிமாறலாம்.