பட்டேல் சிலையை விட சமையல் கேஸ் விலை அதிகம்: நெட்டிசன்கள் கிண்டல்

Last Modified வெள்ளி, 2 நவம்பர் 2018 (20:49 IST)
நேற்று முன் தினம் பிரதமர் நரேந்திரமோடி உலகின் மிகப்பெரிய சிலையான இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லாபாய் பட்டேலின் சிலையை திறந்து வைத்தார். இந்த சிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் இந்தியாவுக்கு இதுவொரு பெருமை என்பதை மறுப்பதற்கில்லை

இருப்பினும் இந்த சிலையை கிண்டல் செய்து நெட்டிசன்கள் பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு சமூக வலைத்தள பயனாளி பட்டேல் சிலையின் உயரத்தை விட சமையல் கேஸ் விலை அதிகம் என்பதை குறிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.


அந்த புகைப்படத்தில் அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை உள்பட பல பெரிய சிலைகளின் உயரத்தை குறிப்பிட்டு சர்தார் பட்டேலின் சிலையின் உயரம் 182 மீட்டர்தான். ஆனால் சமையல் கேஸ் விலை ரூ.500. எனவே பட்டேல் சிலையின் உயரத்தைவிட சமையல் கேஸ் விலை தான் உயர்ந்தது என்பதை குறிக்கும் வகையில் உள்ளது. இந்த புகைப்படத்திற்கு நெட்டிசகள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :