1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
  4. Refreshing Giving Elaneer payasam Do you want to do...!

புத்துணர்ச்சி தரும் இளநீர் பாயாசம் செய்ய வேண்டுமா...!

இளநீர் பாயாசம்
தேவையான பொருட்கள்: 
 
பால் - அரை லிட்டர்
இளநீர் மற்றும் வழுக்கைத் துண்டுகள் - ஒரு கப் 
தேங்காய் பால் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - சிட்டிகை
முந்திரி - 10
நெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை: 
 
இளநீர் வழுக்கைத் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள இளநீர் வழுக்கைத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் விழுதாக  அரைத்தெடுக்கவும். 
 
அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.  அதனுடன் அரைத்த தேங்காய் வழுக்கை விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு தேங்காய்பால் சேர்த்து கலந்து இறக்கவும். 
 
மேலே அலங்கரிக்க இளநீர் வழுக்கைத் துண்டுகள், முந்திரி சேர்த்து அலங்கரித்து பருகலாம். சுவயான புத்துணர்ச்சி தரும் இளநீர் பாயாசம் தயார்.
அடுத்த கட்டுரையில்
நார்த்தங்காய் எந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது...?