1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

அருமையான சுவையில் கேரளா ஸ்பெஷல் கடலை கறி!

தேவையான பொருட்கள்:
 
கருப்பு கொண்டைக்கடலை - 100 கிராம்
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிள்காய் - 1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
சோம்பு – அரைதேக்கரண்டி
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
கொண்டைக்கடலையை ஆறு முதல் 8 மணி நேரம் வரை ஊறவைக்கவும். குக்கரில் ஊறிய கடலை, மஞ்சள் தூள், தேவைக்கு உப்பு போட்டு மூடி 6 விசில் விட்டு, வேக வைத்து எடுக்கவும்.
 
ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தேங்காய் துருவல் லேசாக சிவற வறுக்கவும், அத்துடன் தனியாப் பொடி, சீரகப் பொடி, சோம்பு பொடி,  மிளகாய் பொடி சேர்த்து லேசாக வறுத்து ஆற வைக்கவும். வறுத்த மசாலாவை தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும்.
 
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின், கடுகு, கறுவேப்பிலை போட்டு பொரிக்கவும். பின்னர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு அத்துடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிள்காய் சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கவிடவும். தக்காளி நன்கு வதங்கிய பின் அரைத்த மசாலாவை சேர்த்து  தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 
 
நன்கு கொதித்து வெந்ததும் எடுத்து வைத்த கொண்டைக்கடலையை சேர்க்கவும். உப்பு சரிபார்க்கவும். நன்கு கொதித்து வரும் பொழுது அடுப்பை குறைத்து  வைக்கவும். தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொதித்து இறக்கவும். சுவையான கேரளா ஸ்பெஷல் கடலை கறி தயார். வெறும் சாதம், சப்பாத்தி, ஆப்பம், புட்டுவுடன் சாப்பிட ஜோராக இருக்கும். கேரளாவில் பிட்டு இணை உணவாக இதனை பயன்படுத்துகிறார்கள்.