வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2022 (09:58 IST)

அன்றாட உணவில் கருப்பட்டியை பயன்படுத்துவதால் உண்டாகும் பயன்கள் !!

Karupatti
காபியில் சர்க்கரைக்கு பதிலாக பனங்கருப்பட்டி போட்டு குடிக்கலாம். பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.


ஒமத்தை பனங்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், வாயுத்தொல்லை நீங்கும். குப்பைமேனி கீரையுடன் பனங்கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

பழங்காலத்தில் எல்லாம் இனிப்புச் சுவைக்காக கருப்பட்டியைத் தான் அதிகம் பயன்படுத்தி வந்தார்கள். மேலும் கருப்பட்டி கெமிக்கல்கள் ஏதும் சேர்க்காமல் இயற்கையாக வெறும் பனை நீரைக் காய்ச்சி தயாரிக்கப்படுவதால், அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைத்து, உடல் ஆரோக்கியம் மேம்படும். கருப்பட்டி அடர்ந்த நிறத்தில் இருக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

கருப்பட்டியில் உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்குத் தேவையான கார்போஹைடிரேட் நிறைந்துள்ளது. கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தான், இரத்த சோகை பிரச்சனை ஏற்படும். எனவே இரத்த சோகை ஏற்படாமல் இருக்க, கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்தால் இரத்த சோகை ஏற்படாது.

கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் சீராக்கி, இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பொட்டாசியம், மக்னீசியம், காப்பர், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்றவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, கிருமிகள் மற்றும் தொற்றுகளை எதிர்த்துப் போராடி, உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். ஒருவர் தினமும் கருப்பட்டியை உட்கொண்டால், நோய்கள் அண்டாமல் தடுக்கலாம்.

உணவு உட்கொண்ட பின் கருப்பட்டியை சிறிது உட்கொண்டால், அது செரிமான உறுப்புக்களைத் தூண்டி, எளிதில் செரிமானம் நடைபெறச் செய்யும். அதுவும் கருப்பட்டி உடலினுள் செல்லும் போது அசிட்டிக் அமிலமாக மாறி, வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, எளிதில் செரிமானமாகச் செய்யும். ஒருவரது உடலில் செரிமானம் சீராக நடைபெற்றால், குடலியக்கமும் சீராகி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கும்.