வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (09:39 IST)

தரமற்ற முறுக்கு, லட்டு பிரசாதம்; பறிமுதல் செய்த அதிகாரிகள்! – வடபழனியில் பரபரப்பு!

வடபழனி முருகன் கோவில் தரமற்ற பிரசாதம் விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் பிரசாதத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் தரமற்ற முறையில் பிரசாத பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேரில் சென்ற நிலையில், பிரசாதம் விற்கும் நிலையத்தில் உள்ள பிரசாதங்கள் எதிலும் காலாவதி தேதி, விலை என எதுவும் குறிப்பிடாமல் இருந்துள்ளது.

கோவிலுக்கு பிரசாதம் தயாரித்து வழங்கும் டெண்டர் எடுத்துள்ள சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான அடுமனையில் ஆய்வு செய்தபோது அங்கு சுகாதாரமற்ற முறையில் பிரசாதம் தயாரிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ரூ.15 லட்சம் மதிப்புள்ள முறுக்கு, லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் வடபழனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.