புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By

சுவை நிறைந்த சோமா‌ஸ் செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
மைதா - 1 க‌ப் 
எண்ணெய் - 1 க‌‌ப் 
நெ‌ய், ரவை  - தலா கா‌ல் க‌ப் 
தே‌ங்கா‌ய் துருவ‌ல், ச‌ர்‌க்கரை - தலா கா‌ல் க‌ப்
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய் பொடி - 1 தே‌க்கர‌ண்டி 
முந்திரி வறு‌த்து உடை‌த்தது - 3 தே‌க்கர‌ண்டி
செய்முறை:
 
ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் மைதா மாவை‌க் கொ‌ட்டி அ‌தி‌ல் உ‌ப்பு, நெ‌ய் சே‌ர்‌த்து, ‌நீ‌ர் ஊ‌ற்‌றி ச‌ப்பா‌த்‌தி மாவு பத‌த்‌தி‌ற்கு ‌பிசையவு‌ம். 
 
வெறு‌ம் கடாயில் ரவை, துறு‌விய த‌ே‌ங்கா‌ய் ஆ‌கியவ‌ற்ற‌ை‌த் த‌‌னி‌த்த‌னியாக வறு‌க்க‌வு‌ம். ஒரு ‌கி‌ண்ண‌த்‌தில் ரவை, முந்திரி, தேங்காய், ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொ‌ள்ளவு‌ம். மைதா மாவை ‌மிகவு‌ம் சின்ன உருண்டையாக எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்.
 
இதன் நடுவில் ரவை பூரணத்தை வைத்து மடித்து, ஓரத்தை அழுத்தி ஒட்டவும். இ‌ப்படி செ‌ய்த ‌பி‌ன், கடா‌யி‌ல் எ‌ண்ணெயை‌க் காயவை‌த்து அ‌தி‌ல் ஒ‌வ்வொ‌ன்றாக‌ப் போ‌ட்டு பொரித்து எடுக்கவும். சுவையான சோமா‌ஸ் தயார்.