1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
  4. Karthikai Special Panai Olai Kozhukattai To make...!

கார்த்திகை ஸ்பெஷல் பனை ஓலை கொழுக்கட்டை...!

பனை ஓலை கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி - முக்கால் கிலோ
கருப்பட்டி - அரை கிலோ
ஏலக்காய் - 8
தேங்காய் - ஒரு மூடி துருவியது
பனை ஓலை - 10 ஓலைகள்
செய்முறை:
 
பச்சரிசியை ஊறவைத்து களைந்து நிழலில் உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும். கடாயை காயவைத்து  துருவிய தேங்காய் ஈரம்போக வறுத்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, ஏலக்காய் தூள், தேங்காய்  துருவல் ஆகியவற்றை போடவும். 
 
கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இளம்பாகு பதத்தில் காய்ச்சவும். பின் இறக்கி வடிகட்டி மாவுடன் பிசையவும்.  ஓலையை அரை அடி நீளத்திற்கு  நறுக்கி பிசைந்த மாவை அதன் நடுவில் வைத்து இட்டித் தட்டில் வேகவிட்டு எடுக்கவும்.  அவ்வளவுதான் சுவையான பனை ஓலை கொழுக்கட்டை தயார்.
அடுத்த கட்டுரையில்
பத்து நாளில் பத்து கிலோ வரை எடை குறைக்கலாம்!!