செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

அனைவரும் விரும்பும் பிரட் அல்வா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
 
மில்க் பிரட் - 10 துண்டுகள்
 பாதாம் - 15
முந்திரி - 15
ஏலக்காய் - 5
நெய் - அரை கப்
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1 கப்

செய்முறை:
 
* பிரட் துண்டுகளின் ஓரங்களில் வெட்டி விட்டு நன்கு உதிர்த்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் நெய்யை ஊற்றி காய்ந்ததும்,  பாதாம் மற்றும் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 
* அடுத்து உதிர்த்த பிரட் துண்டுகளை நெய்யில் போட்டு, பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதிக்க  விடவும். பாலானது நன்கு கொதிக்கும் போது அதில் சர்க்கரையை போடவும். சர்க்கரை கரையும் வரை அடுப்பில் வைக்கவேண்டும்.
 
* பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் பாதாமில் 4 பிரட் துண்டுகளை தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதமுள்ளவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி,  பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். அரைத்த பேஸ்ட்டை கொதிக்கும் பாலில் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
 
* பின்பு வறுத்து வைத்துள்ள பிரட் தூளை நெய்யுடன் பாலில் சேர்த்து, தீயை குறைவிலேயே வைத்து, 10 நிமிடம் வேகவைக்கவும். கைவிடாமல் கிளறிக்கொண்டே  இருக்க வேண்டும். இதற்குள் பாலானது வற்றி, அல்வா போன்று வந்துவிடும். இப்போது ஓரங்களில் நெய் விட ஆரம்பிக்கும்.

பின்னர் இதன் மேல் பாதாம் மற்றும்  முந்திரியால் அலங்கரிக்கவும். இப்போது சுவையான பிரட் அல்வா தயார்.