புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (10:55 IST)

பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து அல்வா கொடுக்கும் போராட்டம்

பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அல்வா கொடுக்கும் போராட்டம். 

 
பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது ரூ 100  ரூபாய்க்கு தொடும் நிலையில் உள்ளது இதனால் நடுத்தர மக்கள் அணுகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் இதை கண்டித்து  இந்தியா முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் மதுரையில் மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரை கிரைம் பிரான்ச் பகுதியில் அதன் மாவட்ட தலைவர்  தாஷி தின் அவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர் பின்னர் பொதுமக்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு வித்தியாச முறையில் அல்வா கொடுத்தனர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.