திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 5 ஜூன் 2021 (08:47 IST)

விராட் கோலியைத் தவிர யாரும் எனக்குத் தெரியவில்லை… பிரட் லி கருத்து !

இப்போது விளையாடும் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி சிறந்தவர் என ஆஸி முன்னாள் வீரர் பிரட் லி தெரிவித்துள்ளார்.

ஐசிசிக்காக அளித்த ஒரு நேர்காணலில் பேசியுள்ள பிரட்லி ‘இப்போது விளையாடும் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலியே எனக்கு சிறந்தவராக தெரிகிறார். அவரது சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. வயது ஆக ஆக அவரின் ஆட்டத்திறன் சிறப்பாகிக் கொண்டே இருக்கிறது. கிரிக்கெட் மீதான அவரின் ஞானம் வியக்க வைக்கிறது.

நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். அதே போல சிறந்த பவுலர் என்றால் அது பாட் கம்மின்ஸ்தான்’ எனக் கூறியுள்ளார்.