வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By

சுவையான வெள்ளை பணியாரம் எப்படி செய்வது....?

தேவையானவை: 
 
பச்சரிசி - ஒரு கப்
உளுந்து - 4 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: 
 
அரிசி, உளுந்தை சேர்த்து சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு உப்பு, சர்க்கரை சேர்த்து நைஸாக அரைக்கவும் (தோசை மாவு  பதத்தில் இருக்க வேண்டும்). 
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதனுடன் சிறிது நெய் சேர்த்து காய்ந்ததும், வட்ட வடிவ குழிக் கரண்டியால் மாவை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும். இதை ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.
 
குறிப்பு:  மாவு புளிக்கக் கூடாது. அரைத்த 10 நிமிடத்தில் செய்யவும். இதற்கு கார சட்னி சூப்பர் காம்பினேஷனாக இருக்கும்.