1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

சுவை மிகுந்த பாசிப்பருப்பு பாயாசம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: 
 
பாசி பருப்பு - 1 கப்
பச்சரிசி மாவு - 2 ஸ்பூன்
வெல்லம் - 1 கப் (துருவியது)
நெய் - 1/4 கப்
முந்திரி - 10
உலந்த திராட்சை - 10
ஏலக்காய் - 3 (நசுக்கியது)
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன் 

செய்முறை:
 
* பாசிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்த பின் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். (பாசிப்பருப்பு வேகும் வரை தேவையான அளவு தண்ணீர் சேர்க்கலாம்). வெந்த பருப்பை நன்கு மசித்து விடவும்.
 
* நன்றாக வெந்தபின் பச்சரிசி மாவு தண்ணீர் விட்டு கலக்கி பருப்பு கலவையில் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும். வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி கரைய விடவும். 
 
* வெல்லம் கரைந்ததும் எடுத்து வேகவைத்த பருப்பில் வடிகட்டி ஊற்றவும். பருப்புடன் ஏலக்காய், வெல்லத்தை சேர்த்ததும் நன்கு கிளறி விட்டு அடுப்பில் வைத்து  மிதமான தீயில் கிளறவும்.
 
* மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து பருப்பு கலவையில் கொட்டவும். தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி  பரிமாறலாம். சுவையான பாசிப்பருப்பு பாயாசம் தயார்.