புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By

சூப்பரான சுவையில் பிரெட் அல்வா செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
பிரெட் துண்டுகள் - 10
சர்க்கரை - 2 கப்
முந்திரி - 20
பாதாம் - 10
உலர்ந்த திராட்சை - 10
நெய் - 1 கப்
பால் - 500 லிட்டர்
டால்டா - 2 டீஸ்பூன்.
செய்முறை:
 
பிரெட்டை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி அரைத்துக் கொள்ளவும். மிகவும் பொடியாகிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பாலை  நன்கு சுண்ட காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும், இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் பொடித்து வைத்துள்ள பிரெட்டை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


 
பிறகு வாணலியில் 11/2 கப் தண்ணீர் விட்டு சர்க்கரையை போட்டு 5 நிமிடம் கிளறி பிரெட் துண்டுகள் சேர்த்து வேக விடவும். பிரெட் துண்டுகள் சற்று வெந்தவுடன் அதில் நெய் மற்றும் டால்டா சேர்த்து அதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை, துறுவிய பாதாம் சேர்த்து கிளறி   விடவும். சுவையான பிரெட் அல்வா தயார்.
 
குறிப்பு: இதில் தேவைப்பட்டால் கன்டன்ஸ்ட் மில்க் சேர்க்கலாம்.