திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

ருசியான கறிவேப்பிலை தொக்கு செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
கறிவேப்பிலை - 75 கிராம்
இஞ்சி - சிறு துண்டு
புளி - எலுமிச்சை அளவு
கடலை பருப்பு - 3/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 3/4 தேக்கரண்டி
மிளகு - 3/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
சீரகம் - 3/4 தேக்கரண்டி
வெந்தயம் - 3/4 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
தனியா - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், வெந்தயம்,  தனியா ஆகியவற்றை சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.


 
கடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி புளி சேர்த்து வதக்கவும். பின், அதில் கறிவேப்பிலை இஞ்சி சேர்த்து வதக்கி ஆறியதும், தண்ணீர்  சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதில் அரைத்த விழுது, பொடி  செய்தவை, உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறு தீயில் வைத்து சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
 
கறிவேப்பிலை பச்சை வாசனை போய், தொக்கு போல் வந்தவுடன், இறக்கினால் சுவையான கறிவேப்பிலை தொக்கு தயார்.