ஆரோக்கியம் தரும் பச்சைப் பயறு கட்லட் செய்ய...!!
தேவையான பொருட்கள்:
பச்சைப் பயறு - 1/4 கிலோ
கேரட், பீன்ஸ் - தலா 50 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - பொடித்தது சிறிதளவு
வெங்காயம் - 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
காய்ந்த பிரெட் தூள் - சிறிதளவு.
செய்முறை:
பச்சைப் பயறைத் தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், கேரட், பீன்ஸ், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர், வேகவைத்த பச்சைப் பயறுடன் வதக்கிய பொருட்களைச் சேர்த்துக் கலக்க வேண்டும். இதனுடன், காய்ந்த பிரெட் தூள் சேர்த்து, வடை மாவுப் பதத்துக்குப் பிசைந்து, எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த கட்லெட் தயார்.