களைகட்டும் கல்யாணம்... வருங்கால மனைவியுடன் ராணா வெளியிட்ட புகைப்படம்!

Papiksha Joseph| Last Modified வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (08:14 IST)

பாகுபலி படத்தை எடுத்தவர்களும் அதில் நடித்தவர்களும் மறந்தாலும் ரசிகர்கள் அதை மறக்க மாட்டார்கள். எப்போதும் புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில், அப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த நடிகார் ராணா சமீபத்தில் தனது காதலி இவர் தான் என மஹீகா பஜாஜ் என்ற பெண்ணை அறிமுக செய்தார்.

இவர் ஒரு இண்டீரியர் டிசைனர், மாடல் என பன்முகம் கொண்டவர் ராணாவின் வீட்டிலும் அப்பெண்ணின் வீட்டிலும் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டதால் திருமண நிச்சயம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்துவிட்டனர் . கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து வரும் ஆகஸ்ட் 8ம் தேதி (நாளை) ராமநாயுடு ஸ்டுடியோஸில் ராணா - மஹீகா பஜாஜ் திருமணம் நடக்கப் போகிறது.

உறவினர்கள் 30 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் இத்திருமணத்தில் கோவிட் 19 பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் தற்போது திருமண முன்னேற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருமணத்துக்கு முந்தைய சடங்குகளில்
மணமக்கள் பிஸியாகியுள்ளனர். இந்த அழகிய ஜோடியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


And life moves fwd in smiles :) Thank you ❤️

A post shared by Rana Daggubati (@ranadaggubati) onஇதில் மேலும் படிக்கவும் :