1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By VM
Last Updated : சனி, 22 செப்டம்பர் 2018 (12:12 IST)

வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்: ராகுல் பிரீத்சிங் பேட்டி

தெலுங்கில் மகேஷ் பாபு, ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் என டாப் நடிகர்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ரகுல் பிரீத் சிங். 

 
தமிழில் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தன் மூலம் பிரபலம் ஆகி. தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே. படத்தில் நடித்து வருகிறார். தற்போது  தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேட்டி ஒன்று ரகுல் பிரீத்சிங்  கூறியுள்ளார்.
 
"எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். நான் 5.9 அடி உயரம் இருக்கிறேன். அதைவிட உயரமானவராக என்னை மணப்பவர் இருக்க வேண்டும். அவருக்கு தலைக்கனம் இருக்க கூடாது. எல்லோரையும் மதிக்க வேண்டும். நேரத்தின் மதிப்பு தெரிந்து நடக்க வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக  இருக்க வேண்டும். 
 
இப்படி நான் பேசுவதால் திருமணத்துக்கு தயாராகி விட்டேன் என்று அர்த்தம் இல்லை. இன்னும் அது பற்றி சிந்திக்கவில்லை. இப்போது எனது கவனமெல்லாம்  சினிமாவில்தான். நிறைய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த நடிகை என்று பெயர் எடுப்பதுதான் முக்கியம். அதற்காக உழைக்கிறேன்"  இவ்வாறு அவர் கூறினார்.