ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (14:09 IST)

பொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி

மதுரவாயல் இன்ஸ்பெக்டர் தனது கன்னத்தில் அறைந்து, வீட்டை விட்டு வெளியேற்றியதாக கண்ணீர் பேட்டியளித்துள்ளார்.

 
சென்னை மதுரவாயலில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு எடுத்த தனது மகள் வனிதா, காலி செய்ய மறுப்பதாக நடிகர் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், மதுரவாயல் போலீசார் வனிதா விஜயகுமாரை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றினர். மேலும், அவரோடு அங்கு தங்கியிருந்த 8 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய வனிதா “எனது தந்தை விஜயகுமார் திரைப்படங்களில் நல்ல தகப்பன் போல் நடிக்கிறார். ஆனால், நிஜவாழ்வில் பெற்ற மகளை வீட்டிலிருந்து விரட்டி அடிக்கிறார். என் தாயும் இல்லை. காவல் நிலையம் வந்தால் இங்கு செல்.. அங்கு செல் என்கின்றனர். எங்கு செல்வது, எங்கு சென்று தங்குவது எனவே தெரியவில்லை. சினிமாகாரர்களுக்கு வீடு வாடகைக்கு யாரும் கொடுப்பதில்லை. நடுத்தெருவில் நிற்கிறேன். மதுரவாயல் இன்ஸ்பெக்டர் என் கன்னத்தில் அறைந்து வீட்டை விட்டு வெளியேற்றினார்” எனக்கூறி அவரின் கன்னத்தை காட்டி கண்ணீர் வடித்தார்.