ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...
எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ முக்கிய வேடத்தில் நடித்து உருவான திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தை கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டனர்.. ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியிடவில்லை
. எனவே படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்துக்கு போனார்.. ஆனால் ஒரு மாதமாகியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி வழக்கை வாபஸ் பெற்றதோடு படத்தின் மறு தணிக்கைக்கும் விண்ணப்பித்தார் விஜய்.
ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் நாங்கள் வருகிற 9ம் தேதி படம் பார்க்க திட்டமிட்டிருக்கிறோம். ஏற்பாடு செய்யுங்கள் என தணிக்கை வாரியத்திலிருந்து தயாரிப்பாளருக்கு தகவல் போயிருக்கிறது. அவர்கள் படம் பார்த்துவிட்டால் இரண்டு, மூன்று நாட்களில் சான்றிதழ் கொடுத்து விடுவார்கள்..
ஆனாலும் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகுதான் படம் வெளியாகும் என தெரிகிறது. இது உண்மையிலேயே விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்.. ஆனால், விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நேற்று திரிஷாவை அழைத்துகொண்டு விஜய் திருமணத்துக்கு போனதால் அவர் மீது கடும் விமர்சனங்கள் கிளம்பியிருக்கிறது. விஜய் ரசிகர்கள் பலருமே அதிருப்தியடைந்துள்ளனர். எனவே இந்த செய்தியை கொண்டாடும் மனநிலையில் விஜய் ரசிகர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்...