புதன், 10 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 15 அக்டோபர் 2020 (18:59 IST)

முரளிதரனாக நடிக்க என்னை கேட்டார்கள் நான் மறுத்துவிட்டேன் - அசுரன் நடிகர் பளீச்!

முரளிதரனாக நடிக்க என்னை கேட்டார்கள் நான் மறுத்துவிட்டேன் - அசுரன் நடிகர் பளீச்!
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 5 மொழிகளில் 800 என்ற பெயரில் படமாக்க உள்ளனர். இந்த படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க, கனிமொழி படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி சபாபதி இயக்க உள்ளார்.

இந்நிலையில் தமிழ் அமைப்புகள் சில, முரளிதரன் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்றும், ஈழப்போருக்கு எதிராகப் பல கருத்துகளை வெளியிட்டவர் என்றும் குற்றச்சாட்டு வைத்து இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர். கடந்த சில நாட்களாக இந்த எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது.

இந்நிலையில் தற்ப்போது அசுரன் படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் நடிகர் டீஜே அருணாச்சலம் தான் முத்தையா முரளிதனின் பயோ பிக் படமான 800ல் சிறு வயது முரளிதரனாக நடிக்க படக்குழு அணுகியுள்ளது. ஆனால், இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என அவர் மறுத்துள்ளார். இது குறித்து கூறிய அவர், 800 தயாரிப்பாளர்கள் என்னை அணுகி ஸ்கிரிப்டடை கூறினார்.

முரளிதரனாக நடிக்க என்னை கேட்டார்கள் நான் மறுத்துவிட்டேன் - அசுரன் நடிகர் பளீச்!

அந்த கதையில் இலங்கை அரசாங்கத்துக்கும்,  தமிழர்களுக்கும் இடையிலான போர் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டுள்ளது. அது எனக்கு சரியாக படவில்லை. என் அம்மாவும் ஒரு ஈழ தமிழச்சி தான். போரில் ஏராளமான கொடுமைகள் அனுபவித்துள்ளார். மேலும், கதை குறித்த அரசியலில் ஈடுபட எனக்கு விருப்பம் இல்லாததால் நான் நடிக்க மறுத்துவிட்டேன் என கூறியுள்ளார். அவரது இந்த தைரியமான முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.