800 படத்தில் நடிப்பதா வேண்டாமா? குழப்பத்தில் விஜய் சேதுபதி!
நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் நடிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 5 மொழிகளில் 800 என்ற பெயரில் படமாக்க உள்ளனர். இந்த படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க, கனிமொழி படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி சபாபதி இயக்க உள்ளார்.
இந்நிலையில் தமிழ் அமைப்புகள் சில, முரளிதரன் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்றும், ஈழப்போருக்கு எதிராகப் பல கருத்துகளை வெளியிட்டவர் என்றும் குற்றச்சாட்டு வைத்து இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர். கடந்த சில நாட்களாக இந்த எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது.
இதனால் இப்போது விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் சமீபத்தில் வெளியான 800 படத்தின் மோஷன் போஸ்டரில் கூட அவர் தன் சமூகவலைதள பக்கத்தில் ஷேர் செய்யவில்லை என சொல்லப்படுகிறது.