மக்கள் விரும்புவது என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் – விஜய் சேதுபதிக்கு பிரபல நடிகர் அட்வைஸ்

vijay sethupathi
Sinoj| Last Modified வியாழன், 15 அக்டோபர் 2020 (15:39 IST)

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குறித்து உருவாகும் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. ஆனால் #ShameOnVijaySethupathi என்று சினிமா ரசிகர்கள் தமிழ் ஆர்வலர்கள் டிவிட்டரில் ஹேஸ்டேக் பதிவிட்டு வந்த நிலையில், இன்று பாரதிராஜா, தாமரை, சேரன்,ராமதாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் முரளிதரன் படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதியைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இலங்கை கிரிக்கெட் அணியில் மிகசிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முத்தையா முரளிதரன். தமிழரான இவரது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து விஜய் சேதுபதி ”முரளிதரன் 800” என்ற படம் உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில் படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியானது.


இந்த படத்தின் மோஷன் போஸ்டரை நாளை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட உள்ளனர். இந்த நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஆகிய சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது என கூறப்பட்ட நிலையில் நேற்று
முந்தினம்
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 என்ற போஸ்டர் வெளியானது.

vivek

இந்நிலையில், நடிகர் விவேக், மக்கள் விரும்புவது என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்று 800 பட விவகாரத்தில் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முரளிதரன் கண்டியில் பிறந்தவராக இருந்தாலும் விடுதலைப் புலிகள் போர் நடத்திய போது சிங்கள ராணுவத்திற்கு ஆதரவாக நின்று தமிழர்களுக்கு துரோகம் செய்தார். அதனால் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று பலரும் குரல் கொடுத்து டுவிட்டரில்
#ShameOnVijaySethupathi
என்று ஹேஸ்டேக் பதிவுட்டு வருகின்றனர்.

இந்நிலையில்
விஜய் சேதிபதியின் ரசிகர்கள் we stand with vijay Sethupathi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட்டிங் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :