வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2022 (09:25 IST)

பெண்கள் காண்டம் வாங்கினால் என்ன தப்பு...? சர்ச்சை கேள்விக்கு கூலா பதில் சொன்ன அக்ஷரா!

கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடித்து ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில்அண்மையில் வெளியான திரைப்படம்  “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு”. இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. 
 
இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் அக்ஷரா ஹாசன் ஒரு காட்சியில் கடைக்கு சென்று காண்டம் வாங்குவார். அந்த காட்சி குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, பாதுகாப்பாக செக்ஸ் வைத்துக்கொள்ள நினைப்பது பாராட்ட கூடிய விஷயம் தானே...? 
 
ஒரு பெண் தனியாக சென்று காண்டம் வாங்கினால் என்ன தப்பு? பெண்களும் மனுஷங்க தானே அவங்க மட்டும் செக்ஸ் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவேண்டும் என்பது முடியாது என கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.