வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 28 மார்ச் 2022 (18:57 IST)

குழந்தை பிறந்த மறுநாளே பெயர் சூட்டிய ஆல்யா மானசா - இது கியூட்டா இருக்கேப்பா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. இந்த சீரியலின் முதலாவது சீசனில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்த ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
 
பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்தின் படி திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை இருக்கிறார். தற்போது மீண்டும் கர்ப்பமாக இருந்த ஆல்யாவுக்கு அர்ஷ் என்ற ஆண் குழந்தை பிறந்திருக்கிறான். நேற்று குழந்தை பிறந்த நிலையில் உடனே மகனுக்கு அர்ஷ் என்ற பெயரை சூட்டி அதை ரசிகர்களுக்கும் அறிவித்துள்ளனர். ஷார்ட் அண்ட் ஸீட்டாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.