ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: திங்கள், 6 பிப்ரவரி 2023 (17:28 IST)

இரட்டை சதம் அடித்த சந்தர்பால்.. 500ஐ நோக்கி செல்லும் ஸ்கோர்!

wi vs zim
மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சந்தர்பால் மிக அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் அடித்து உள்ளார்.
 
நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் வரை மேற்கிந்திய தீவுகள் அணிய ஆறு விக்கெட் இழப்பிற்கு 447 ரன்கள் அடித்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது
 
தொடக்க ஆட்டக்காரரான சந்திர்பால் மிக அபாரமாக விளையாடி 207 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பிராத் வெயிட் 182 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் ஜிம்பாவே அணி பேட்டிங் செய்ய உள்ளது.
 
Edited by Siva