திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 6 பிப்ரவரி 2023 (16:02 IST)

ஷாகித் அப்ரிடியின் மகளை மணந்த ஷாகின் அப்ரிடி!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு மையமாக உள்ளார். தொடர்ந்து அணிக்காக சிறப்பான பந்துவீச்சை வீசிவரும் அவர் சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கிறார்.

இந்நிலையில் ஷாகின் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியின் மகளை மணந்துள்ளார். ஷாஹீன், தனது உறவினரான அப்ரிடியின் அழகிய மகள் அக்சாவை காதலித்து வந்த நிலையில் தற்போது இருவரின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.