திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 ஜூன் 2019 (14:13 IST)

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் யுவராஜ் சிங்- ரசிகர்கள் அதிர்ச்சி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தற்போது நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இது ரசிகர்கள் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் மிகப்பெரும் அதிர்ச்சையை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவரான யுவராஜ் சிங் 40க்கும் மேற்பட்ட டெஸ்ட் மேட்சுகளிலும், 304க்கும் மேற்பட்ட ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 2011ல் நடந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங்.

தற்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது “இதுவரை இந்தியாவுக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளேன். 2002ல் நடந்த நெட்வெஸ்ட் கிரிக்கெட் தொடர் என் வாழ்வில் மறக்கமுடியாதது. 2011ல் இலங்கைக்கு எதிராக விளையாடிய உலகக்கோப்பை மறக்கமுடியாத நினைவுகள்.

28 ஆண்டுகளுக்கு பிரகு உலகக்கோப்பையை வென்ற அணியில் நானும் ஒருவனாய் இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். என்னை தேர்ந்தெடுத்த சந்து போடே, டி ஏ சேகர் ஆகியோருக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் நான் பல போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் எனது சக நண்பர்களான கவுதம் கம்பீர், ஜாகீர் கான், சேவாக் ஆகியோர்தான். அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கிரிக்கெட்டை விட்டு வெளியேறுவதில் என் தந்தைக்கு உடன்பாடே இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

யுவராஜின் கிரிக்கெட்டிலிருந்து வெளியேறுவது ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.