வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 25 மார்ச் 2019 (12:23 IST)

ஓய்வு குறித்து சச்சினோடு ஆலோசனை ? – யுவ்ராஜ் சிங் விளக்கம் !

கடந்த சில ஆண்டுகளாக சரியான பார்ம் இல்லாமல் தவித்துவரும் யுவ்ராஜ் சிங் தனது ஓய்வு குறித்து பதிலளித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற 12 ஆவது ஐபிஎல்லின் மூன்றாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மும்பை அணியின் யுவ்ராஜ் நீண்ட இடைவெளிக்கு நேற்று சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தபோதும் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த யுவ்ராஜ் நேற்றையப் போட்டியின் தோல்வி மற்றும் தனது ஓய்வு குறித்து பேசியுள்ளார். அதில் ‘ இந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெறாமல் போனதற்கு ரோஹித், பொல்லார்ட் மற்றும் டி காக் ஆகியோரின் விக்கெட்டை விரைவாக இழந்ததே காரணம். எங்களுக்கு நல்லதோர் பார்ட்னர்ஷிப் அமையாமல் போய்விட்டது. கடந்த 2 ஆண்டுகளாக என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் வந்து போயுள்ளன. என்னை நானே ஆய்வு செய்து கொண்டதில் இன்னும் சில காலம் கிரிக்கெட் போட்டியில் விளையாடலாம் என எனக்குத் தோன்றியது.சரியான நேரம் வரும்போது, ஓய்வு அறிவிப்பை நான்தான் முதலில் அறிவிப்பேன். யாரும் என் ஓய்வு குறித்து எனக்கு யாரும் நெருக்கடி கொடுக்காதவகையில் முடுவை எடுப்பேன்.  ஓய்வு குறித்து சச்சினுடன் ஆலோசித்து குழப்பங்களுக்கான சில முடிவுகளைப் பெற்றேன்’ எனக் கூறியுள்ளார்.

யுவ்ராஜின் ஆட்டத்திறன் இந்த ஐபிஎல் தொடரில் மேம்படும் பொருட்டுஅவர் இன்னும் சில காலம் கிரிக்கெட் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.