1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (12:17 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரஹானே.. அணியின் முழு விபரங்கள்..!

Ajinkya Rahane
உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. 
 
இந்த நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் விபரம் சமீபத்தில் வெளியானது என்பதும் பேட் கம்மிங்ஸ் இந்த அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் பிசிசிஐ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியை அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சிறப்பாக செயல்பட்டு வரும் ரஹானே இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் முழு விவரங்கள் இதோ: 
 
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கேஎல் ராகுல், பரத், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், உனாத்கட்.
 
Edited by Mahendran