முதல் டி-20 போட்டி: இந்தியா அபார வெற்றி

Last Modified ஞாயிறு, 4 நவம்பர் 2018 (22:45 IST)
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை வென்ற இந்திய அணி, இன்று முதல் டி-20 போட்டியில் மே.இ.தீவுகள் அணியுடன் மோதியது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 109 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 110 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 6 ரன்களிலும், தவான் 3 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் ராகுல் 19 ரன்களிலும், ரிஷப் பண்ட் ஒரு ரன்னிலும் அவுட் ஆனதால் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 45 ரன்கள் மட்டுமே எடுத்து ஒருகட்டத்தில் தத்தளித்தது.

ஆனால் தினேஷ் கார்த்திக், பாண்ட்யா, மற்றும் பாண்டே ஆகியோர்களின் பொருப்பான ஆட்டத்தால் இந்திய அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 110 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.


இதில் மேலும் படிக்கவும் :