முதல் டி-20 போட்டி: 108 ரன்கள் மட்டுமே எடுத்த மேற்கிந்திய தீவுகள்

Last Modified ஞாயிறு, 4 நவம்பர் 2018 (20:42 IST)
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்தாலும் டி-20 போட்டி தொடரில் நல்ல சவாலை கொடுக்கும் என்றும் குறிப்பாக டி-20 தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இன்று கொல்கத்தாவில் நடந்த முதல் டி-20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அலென் 27 ரன்களும், ஹோப் மற்றும் பொல்லார்டு தலா 14 ரன்களும் எடுத்துள்ளனர்


இந்திய பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். யாதவ், அஹ்மது, பும்ரா மற்றும் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

110 என்ற இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :