டி-20 போட்டியிலும் சதமடித்த ரோஹித் சர்மா: இந்தியாவுக்கு 2வது வெற்றி

Last Modified புதன், 7 நவம்பர் 2018 (07:34 IST)
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் இந்த தொடரில் ரோஹித் சர்மா மிக நன்றாக விளையாடி அதிக சதமடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்த 2வது போட்டியிலும் அவர் 111 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

நேற்று லக்னோவில் நடந்த 2வது டி-20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 195 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 111 ரன்களும், தவான் 43 ரன்களும் அடித்தனர்.


196 என்ற கடின இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்டு 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் உள்ளது. ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதினை வென்றார். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி-20 போட்டி வரும் 11ஆம் தேதி சென்னையில் நடைபெறும்


இதில் மேலும் படிக்கவும் :