3 ஆண்டுகள் நடைபெறும் உலகக்கோப்பை டெஸ்ட் போட்டி தொடர்: அட்டவணை தயார்

Last Modified புதன், 20 ஜூன் 2018 (18:31 IST)
உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மற்றும் உலகக்கோப்பை டி20 போட்டி தொடர் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் முதல்முறையாக உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெறவுள்ளது. ஒன்பது நாட்டின் அணிகள் கலந்து கொள்ளவுள்ள இந்த போட்டி தொடர் வரும் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன்படி 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடர் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி முடிகிறது

மூன்று ஆண்டுகள் முதல் முறையாக நடத்தப்படும் இந்த உலக டெஸ்ட் தொடரில் 9 அணிகள் கலந்து கொள்ளவிருப்பதாகவும், இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என்றும் இறுதி போட்டி 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :