உலகக்கோப்பை கால்பந்து: முதல்முறையாக ஜப்பான் செய்த சாதனை
இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாட்டின் அணி ஒன்று தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள நாட்டின் அணியை தோற்கடித்ததே கிடையாது என்ற வரலாறு நீடித்து வந்த நிலையில் முதன்முறையாக கொலம்பியா அணியை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை செய்துள்ளது.
இன்று நடைபெற்ற ஜப்பான் மற்றும் கொலம்பியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே பெனால்டி கிக் வாய்ப்பு மூலம் ஜப்பான் ஒரு கோல் போட்டு அசத்தியது. இதனையடுத்து ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் ஜுயான் பெர்னாண்டோ குயின்டோரோ ப்ரீ ஹிக் மூலம் ஒரு கோல் அடித்து சமன்படுத்தினார்
பின்னர் ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் யுவா ஓசாகா ஒரு கோல் அடித்து ஜப்பான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை படுத்தினார். இந்த கோலை சமன்படுத்த கொலம்பியா கடைசி வரை கோல் அடிக்கவில்லை என்பதால் ஜப்பான் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது