உலகக்கோப்பை கால்பந்து: எகிப்து அணியை வீழ்த்தியது ரஷ்யா
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் போட்டியை நடத்தும் ரஷ்ய அணி முதல் போட்டியில் இருந்தே வெற்றிநடை போட்டு வருகிறது. ஏற்கனவே ரஷ்ய அணி, சவுதி அரேபியா அணியை 5-0 என்ற கோல்கணக்கில் அபாரமான வெற்றியை பெற்ற நிலையில் நேற்று எகிப்து அணியுடன் மோதியது.
ரஷ்யா, எகிப்து ஆகிய இரு அணிகளும் நேற்று ஆக்ரோஷமாக தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டதால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் ரஷ்யா அதிரடி ஆட்டத்தை கடைபிடித்தது.
போட்டியின் இரண்டாவது பாதியில் ரஷிய அணியின் அகமது பதே 47வது நிமிடத்தில் ஒரு கோலும், 59வது நிமிடத்தில் டெனிஸ் செரிதேவ் ஒரு கோலும், 62வது நிமிடத்தில் அர்டெம் சுபையா அடிக்க ரஷிய அணி 3-0 என முன்னிலை வகித்தது.
இதனையடுத்து ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் எகிப்து வீரர் மொமது சலா ஒரு கோல் மட்டும் அடித்தார். அதன்பின்னர் எவ்வளவும் முயன்றும் ஆட்டம் முடியும் வரை எகிப்து அணியால் கோல் அடிக்க முடியவில்லை என்பதால் ரஷியா அணி எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது