1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 7 நவம்பர் 2022 (20:52 IST)

டி20 உலகக்கோப்பையை நடத்தும் நாடுகள் கோப்பையை வெல்ல முடியாத சோகம்

T 20 WORLD CUP
டி20 உலகக்கோப்பையை நடத்தும் நாடுகள் கோப்பையை வெல்ல முடியாத சோகம் இந்த முறையும் தொடர்கிறது.
 
கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை  தென் ஆப்பிரிக்கா நடத்திய நிலையில் அந்த அணி முதல் சுற்றுடன் வெளியேறியது. 
 
2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் டி20 உலக கோப்பை தொடர் நடந்த நிலையில் இங்கிலாந்து அணி முதல் சுற்றுடன் வெளியேறியது. 
 
2010-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்ற நிலையில் அந்த அணி முதல் சுற்றுடன் வெளியேறியது.
 
2012 டி20 உலக கோப்பை தொடர் இலங்கையில் நடைபெற்ற நிலையில் அந்த அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது.
 
2014ல் டி20 உலக கோப்பை தொடரை நடத்திய வங்காளதேசம் லீக் சுற்றுடன் வெளியேறியது
 
2016ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்ற நிலையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
 
2021-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகமும், ஓமனும் இணைந்து டி20 உலக கோப்பை தொடரை நடத்தி நிலையில் இரு அணிகளும் தகுதிச்சுற்றில் கூட வெற்றி பெறவில்லை
 
இதுவரை நடந்த 7 தொடர்களிலும் போட்டியை நடத்திய அணிகள் தோல்வி அடைந்த நிலையில் தற்போது 2022 டி20 உலக கோப்பையிலும் இந்த தொடரை நடத்திவரும் ஆஸ்திரேலியா அணி முதல் சுற்றுடன் வெளியேறிவிட்டது.
 
Edited by Siva