ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 அக்டோபர் 2021 (15:42 IST)

டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது!

டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று மேற்கு இந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி சற்றுமுன் தொடங்கியுள்ளது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச தீர்மானம் செய்ததை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேற்கிந்திய தீவுகள் அணி முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
குரூப்-1 பிரிவில் இதுவரை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகள் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்ததை அடுத்து இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது