புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வெள்ளி, 29 அக்டோபர் 2021 (15:06 IST)

ரஜினிகாந்த் குணமடைந்து வருகிறார்- மருத்துவமனை அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது வழக்கமான மருத்துவப் பரிசோதனை என்ற தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் பதறினர்.

இந்நிலையில்,ரஜினியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாவது:

நடிகர் ரஜினிகாந்திற்கு இன்பார்க்ட் என்ற பாதிப்புள்ளது. அதாவது இதயத்திற்குச் செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போகும் அபாயமுள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சை பெற்றால் பெரிய பாதிப்பு ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவமனை நிர்வாகம்  தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஜினிகாந்த்திற்கு ரத்த ஓட்டத்தை  சீரமைப்பதற்கான அறுவைச் சிகிச்சை வெற்றிகரமான நடைபெற்றுள்ளது, இன்னும் சில நாட்களில் அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆவார் எனத் தெரிவித்துள்ளது.