திங்கள், 20 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2023 (08:09 IST)

உலகக்கோப்பை ஹாக்கி.. இந்தியாவுக்கு இன்னொரு வெற்றி!

hockey
கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே இந்தியா ஒரு வெற்றி மற்றும் ஒரு டிரா பெற்றுள்ளது என்பது தெரிந்தது 
 
இந்த நிலையில் ஒடிசாவில் நடைபெற்று வரும் 15 வது உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் கடைசி லீப் போட்டியில் இந்தியா மற்றும் வேல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் கோல் போட தீவிரமாக முயற்சி செய்த நிலையில் இறுதியில் இந்தியா 4 - 2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது 
 
இதன் மூலம் குரூப் டி பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா வரும் 22 ஆம் தேதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலக கோப்பை ஹாக்கி போட்டியை காண தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva