பெண் மீது சிறுநீர் கழித்த போதை பயணி: ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு!
பெண் மீது சிறுநீர் கழித்த போதை பயணி: ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு!
விமானத்தில் பயணம் செய்த போதை பயணி ஒருவர் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் அந்த பயணி நான்கு மாதத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு வந்த விமானம் ஒன்றில் 70 வயது பெண் மீது சங்கர் மிஸ்ரா என்பவர் சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்டது
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஏர் இந்தியா இது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
72 வயது பெண் மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா என்ற நபர் நான்கு மாதத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Siva